You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க மொய் விருந்து நடத்திய தேநீர் கடை உரிமையாளர்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே மாங்கனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சிவக்குமார். இவர் வம்பன் 4 சாலை பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக டீக்கடை வைத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர், இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து தன்னால் பெரிய தொகை வழங்க முடியாது என்பதால் டீக்கடையில் டீ மொய் விருந்து நடத்தி அதில் வரும் வருமானத்தை மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புவதற்காக கடந்த மே 22-ம் தேதி மீண்டும் ஒரு மொய் விருந்தை டீக்கடையில் நடத்தினார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் பணத்தை இட்டுச் சென்றவர்களுக்கு டீ, வடை இலசமாக வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இலங்கை தமிழர்களுக்கு நிதி உதவிகளை வழங்கினர்.
இந்த மொய் விருந்தில் மொத்தம் பொதுமக்கள் நிதியுதவியாக ₹16,602 ரொக்கமும், இரண்டாம் நாளிலும் ஒரு சிலர் நிதியுதவி வழங்கிய மொத்த தொகை ₹17,150 வசூலாகி உள்ளது.
தயாரிப்பு: அருண்குமார்
படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்