கீதாஞ்சலி ஸ்ரீ: சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ன சொல்கிறார்?

காணொளிக் குறிப்பு, சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ன சொல்கிறார்?
பிரசுரிக்கப்பட்டது

இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்வாய்ந்த சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அவரது நாவலான 'ரெட் சமாதி' (Ret Samadhi) என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'டூம் ஆஃப் சாண்ட்'க்கு (Tomb of Sand) இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குடும்பக் கதை இது. இந்நாவல், கணவர் இறந்த பிறகு வாழும் 80 வயதான ஒரு பெண்ணைப் பின்தொடர்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: