அம்பேத்கர் படத்தோடு யானை மீது ஊர்வலம் வந்து திருமணம்‌ செய்த பெண்

பிரசுரிக்கப்பட்டது

மணமகள் மாட்டு வண்டியிலோ ஹெலிகாப்டரிலோ திருமணம் நடக்கும் இடத்திற்கு வருவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், குஜராத்தின் சுரேந்திர நகர மாவட்டத்தில் உள்ள வாத்வான் நகரில், ஒரு திருமண ஊர்வலத்தில், மணமகள் யானை மீது ஏறிச் சென்றுள்ளார்.

ஊர்வலத்தின்போது, அவர் ஒரு பேனாவையும் அம்பேத்கர் படத்தையும் ஏந்தியிருந்தார். பாரதி பர்மாரின் இந்த துணிச்சலான நடவடிக்கை குஜராத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அனைத்துமே பாரதி பர்மாரின் பெற்றோரால் திட்டமிடப்பட்டது. அதைப் பற்றி அறிந்ததும் அவர் முற்றிலும் ஆச்சர்யப்பட்டார்.

பாரதி பர்மாரின் குடும்பத்தினர், அவருடைய திருமணத்தின் மூலம் சமுதாயத்திற்கு ஒரு செய்தியைக் கொடுக்க விரும்பியதாகக் கூறுகிறார்கள்.

பி.ஆர்.அம்பேத்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்கள் மற்றும் தகவல்கள் திருமண அரங்கில் வைக்கப்பட்டிருந்தன. திருமண அழைப்பிதழ் இரு குடும்பத்தினராலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. பாரதி பர்மாரின் குடும்பம் மற்ற குடும்பங்களும் பெண் குழந்தைகளை ஆண்களுக்குச் சமமாகக் கருதி அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்று விரும்புகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: