You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பலகாரம் சுட்டு கோடிகளில் சம்பாதிக்கும் கிராமத்துப் பெண்கள்
தெலங்கானா மாநிலத்தின் பெத்தபள்ளி மாவட்டத்தில் இருக்கும் சுல்தான்பூரை சேர்ந்த பெண்கள், பாரம்பரிய தெலுங்கு வீட்டு சிற்றுண்டிகள், லட்டு, முறுக்கு, அதிரசம் போன்ற பலகார வகைகளை மிகப் பெரிய அளவில் தயாரித்து விற்பதன் முலம், கோடிகளில் வருமானம் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சுய உதவிக் குழு தொடங்கிய இந்த பலகாரத் பதயாரிப்பு தொழிலை தற்போது ஏழு குழுக்கள் செய்கின்றன. விழாக்கள், கொண்டாட்டங்களின்போது அவை நூற்றுக்கணக்கான மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்குகின்றன. ஏழு குழுக்களின் ஆண்டு வருவாய் சுமார் 4 கோடி இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
பலகாரங்களைத் தயாரிக்கும் தொழில், அவர்களை பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக்கியுள்ளது. மேலும், தாங்கள் இப்போது வாழ்க்கையில் சுயசார்பு நிலையில் இருப்பதாக சுல்தான்பூர் பெண்கள் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.
சுல்தான்பூரின் பெண்களைப் பார்த்து ஊக்கம் பெற்று, பக்கத்திலுள்ள ஐந்து ஊர்களைச் சேர்ந்த பெண்களும் பலகார வியாபாரம் தொடங்கியுள்ளார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்