தஞ்சாவூரில் பிறந்து தான்சானியா வரை பயணிக்கும் புவனிதரன் பற்றித் தெரியுமா?

காணொளிக் குறிப்பு, தஞ்சாவூரில் பிறந்து தான்சானியா வரை பயணிக்கும் புவனிதரன் பற்றித் தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

இன்று தன்னுடைய பயணங்களைக் காணொளியாக தமிழ் டிரெக்கர் யூடியூப் சேனலில் வெளியிட்டு கலக்கி வரும், தஞ்சாவூரைச் சேர்ந்த புவனி தரன் படித்தது ஒன்பதாம் வகுப்பு வரை தான். ஆனால், இன்று ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகள், என்று பல உலக நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். உலக மக்களோடு உறவாட மொழி ஒரு தடையே இல்லை என்பதற்கான சான்றாக அவர் திகழ்ந்து வருகிறார்.

அவருடைய முதல் பயணத்தை தஞ்சாவூரிலிருந்து மணாலிக்கு ஏழு நாட்கள் திட்டமிட்டுக் கிளம்பினார். மொழி தெரியாது, தமிழ்நாட்டைத் தாண்டி தனியாக இதுவரை சென்றதே இல்லை. இருந்தும், தைரியமாகத் தனது பயணத்தைத் தொடங்கினார்.

இப்படியாகத் தொடங்கிய அவருடைய திட்டத்தில் ஒரு மாற்றம் நடந்தது. ஏழு நாட்கள் பயணமாகத் திட்டமிட்டுச் சென்றவருடைய பயணக் காலம் 60 நாட்களாக மாறியது. மணாலியோடு நிற்காமல், டெல்லி, ஜெய்பூர் என்று பயணித்தார். அங்கிருந்து மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா என்று வழியில் வரும் வாகனங்களில் லிஃப்ட் கேட்டே சென்னை வரை வந்து சேர்ந்தார்.

தயாரிப்பு: க.சுபகுணம்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: டேனியல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: