தென்னை நார் தொழிற்சாலைகளால் வாழ்வாதார பாதிப்பிற்கு உள்ளாகும் தமிழக கிராமங்கள்

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் தென்னை நார் தொழிற்சாலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் சில கிராமங்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

தென்னை நார் மற்றும் நார்த்தூள்கள், மெத்தை, கைவினைப் பொருட்கள், விளையாட்டு மைதானத்திற்கும் கார்ப்பரேட் பண்ணைகளுக்கும் உரமாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும், பசுமைக்குடிலில் மண்ணின்றி காயர் பித்தை கொண்டு விவசாயம் செய்யவும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தத் தொழிற்சாலைகளில் நார்த்தூள்களை மூன்று முறை, புதிய நீர் கொண்டு உலர்த்துவதால் நிலம், நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுடைந்து மக்கள் வசிக்க முடியாத பகுதியாக மாறி வருகிறது. மேலும், வாய்க்கால், ஆறுகளிலிருந்து இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யாமல் இதைச் செய்வதன் மூலம், வணிக நோக்கத்திற்காக தண்ணீர் திருட்டும் செய்துகொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

தயாரிப்பு - பி. சுதாகர்

ஒளிப்பதிவு - மதன் பிரசாத்

படத்தொகுப்பு - மதன் பிரசாத் , ஜனார்த்தனன் மாதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: