You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"திருமணம் வேண்டாம், குழந்தை மட்டும் போதும்" - ஒற்றை தாயாக மாறிய பெண்
பல பெண்களைப் போலவே, குஜராத்தின் பரூச் நகரைச் சேர்ந்த டிம்பி பர்மர், தனது தாய்மையை முழுமையாக அனுபவித்து மகிழும் பெருமைக்குரிய தாய். ஆனால், அவரது தனிச் சிறப்பு, அவர் திருமணம் செய்துகொள்ளாத ஒற்றைத் தாய்.
35 வயதான டிம்பி தனது குழந்தையைப் பெற்றெடுக்க சோதனைக் குழாய் குழந்தை முறையை தேர்ந்தெடுத்தார். டிம்பி திருமணம் வேண்டாமென முடிவுக்கு வருவதற்கு குடும்ப பிரச்னையே காரணம். அதேநேரம், தாய்மையை அனுபவிக்க விரும்பிய அவர், ஒற்றைத் தாயாக முடிவெடுத்தார்.
சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் வழிமுறை முழுதும் மருத்துவரின் வழிகாட்டுதல் படிதான் நடக்கும். சமூகத்திடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை டிம்பி ஒப்புக் கொள்கிறார். அதற்குத் தயாராகவும் இருக்கிறார்.
தயாரிப்பு: தீபக் சுதசாமா, சஜித் படேல், ரவி பர்மார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்