You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண் குழந்தைகளுக்கு 5 வயதில் முதல் திருமணம்: மாலிஸ் பழங்குடிகளின் விநோத பழக்கம்
ஆந்திரா மற்றும் ஒடிசாவின் எல்லைப் பகுதியில் வசிக்கும் மாலிஸ் எனும் பழங்குடியினரிடையே ஒரு விநோதமான திருமண மரபு உள்ளது. இந்த இனத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் 3 முறை திருமணம் செய்துகொள்வார்கள். அவர்களுக்கு ஐந்து வயது ஆவதற்கு முன்பு ஒருமுறையும் பருவம் அடைந்தவுடன் ஒரு முறையும் திருமணம் நடக்கும்.
ஆனால், இந்த இரண்டு திருமணங்களும் மணமகன் இல்லாமல் நடக்கும். இருப்பினும் அவற்றை மாலிஸ் பழங்குடிகள் அவற்றை திருமணங்கள் என்று கூறியே நடத்துகின்றனர்.
மூன்றாவது முறை நடக்கும் திருமணத்தில் தான் மாப்பிள்ளை இருப்பார். இந்தத் திருமணத்திற்குப் பிறகு மணப்பெண் மாமியார் வீட்டுக்கு அனுப்பப்படுவார். தொடிபுட்டு என்ற இந்த கிராமத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 50 சிறுமிகள் ஒரே நேரத்தில் முதல் திருமணத்தைச் செய்துகொண்டனர்.
உறவினர்கள், விருந்துகள், திருமண விழாக்கள் என கிராமம் முழுவதும் பண்டிகை சூழல் இருக்கும். இதுபோன்ற ஒவ்வொரு திருமணத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்று இதுவரை இதுபோன்ற 20 திருமணங்களைப் பார்த்துள்ள பார்வதி கூறினார்.
செய்தியாளர்: லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
ஒளிப்பதிவு: கோட்டிப்பட்டி பாஸ்கர ராவ்
படத்தொகுப்பு: சந்திரசேகர் பெடபென்கி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்