You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
30 ஆண்டுகளாக ஆணாக வாழும் பெண்: யார் இந்த முத்து மாஸ்டர்?
தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்தவர் சிவா பிள்ளை, இவர் அருகில் உள்ள செக்காரக்குடி, சொக்கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாளை 20வது வயதில் திருமணம் செய்துள்ளார்.
திருமணம் முடிந்து குழந்தை பிறந்து 15வது நாளில் சிவா பிள்ளை இறந்து விட்ட நிலையில், அங்கிருந்து எப்போதும் வென்றான் அருகிலுள்ள காட்டு நாயக்கன் பட்டியில் குடியேறியுள்ளார் மனைவி பேச்சியம்மாள்.
பின்னர், அங்கிருந்து சிறு, சிறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, பெண் குழந்தைக்கு தகப்பன் இல்லை என்ற கவலை இருக்கக்கூடாது என்பதால், பேச்சியம்மாள் என்ற தாய் ஆணாக மாறி முத்துவாக மாறத் தொடங்கியுள்ளார்.
வறுமையின் காரணமாக பல ஊர்களுக்குச் சென்று தொழில் செய்து வந்த முத்து தன்னை பெண்ணாகக் காட்டி கொள்ளாமல் ஆணாகவே வலம் வந்து வெளியூரில் அண்ணாச்சி என்ற பெயர் பெற்று வாழ்ந்து வந்துள்ளார்.
அதன் பிறகு, தூத்துக்குடிக்கு வந்த முத்து, ஊர் மக்கள் கண்டுகொள்ளாத அளவில் வேட்டி, சட்டை உடுத்தி, கிராப் தலையுடன் ஆணாகவே காட்சியளிக்கிறார். 30 ஆண்டுகளாக இதே தோற்றம்தான். டீ கடை, பரோட்டா கடை வரை வேலை பார்த்து வந்ததால் மாஸ்டர் என்று அடையாளம் காணப்படுகிறார் முத்து மாஸ்டர் என்கிற பேச்சியம்மாள். ஆம் இவரை ஊரில் மாஸ்டர் என்று தான் அழைக்கிறார்கள்.
தயாரிப்பு - பிரபுராவ் ஆனந்தன்
படத்தொகுப்பு - ஜனார்த்தனன் மாதவன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்