You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காய்கறி முதல் மாத்திரை வரை – உலகத் தரத்திற்கு இணையான உள்ளூர் டெலிவரி ஆப்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த சாரோஸ் (ZAAROZ) என்ற ஆன்லைன் செயலியை ராம் பிரசாத் மற்றும் ஜெயசிம்ஹன் என்ற இரண்டு நண்பர்கள் வடிவமைத்தனர்.
சிங்கப்பூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர்கள் இருவரும் சொந்தமாக தொழில் தொடங்க முடிவெடுத்து இந்தியாவுக்குத் திரும்பினர்.
தங்களது சொந்த ஊரான சிதம்பரத்தில் ஆன்லைன் செயலி மூலம் உணவு வழங்கலாம் என்று இதனை முதலில் வடிவமைத்துச் செயல்படுத்தினர். பின்னர் காய்கறிகள், பழங்கள், மீன், கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சிகள், மருந்துகள், மளிகை பொருட்கள் தொடங்கி வீட்டுக்குத் தேவையான அனைத்து உபயோகப் பொருட்களும் இந்தச் செயலி மூலமாகக் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
பெருநகரங்களில் உணவு சேவை உள்ளிட்டவை வழங்க பல்வேறு செயலிகள் இருந்த போதிலும், சிறிய நகரம் மற்றும் மிகச்சிறிய நகரங்களில் அதன் சேவை மக்களுக்கு முழுமையாக கிடைப்பது இல்லை. ஆனால், இவர்கள் முயற்சியால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், சின்ன சேலம், திட்டக்குடி, சீர்காழி போன்ற 45 சிறிய நகரங்களில் தற்போது இந்த பணியைச் செய்து வருகின்றனர்.
தயாரிப்பு: நடராஜன் சுந்தர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்