You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரை நூற்றாண்டாக தண்ணீர் இன்றி தவிக்கும் கிராம மக்கள்
சார்லா கோப்ரே ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு ஷாஹாபூர் தாலுகாவில் உள்ள தண்ட் கிராமத்திற்கு வந்தார். ஷாஹாபூர் தாலுகாவில் தண்ணீர் பற்றாக்குறையால் போராடி வரும் 169 கிராமங்களில் இதுவும் ஒன்று.
இங்கு தண்ணீர் பிரச்னை தீவிரமாகி, திருமணங்களுக்கே தடையாகி வருகிறது. இந்த மக்கள் அரை நூற்றாண்டாக தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள்.
திருமணத்திற்கான பேச்சுகளில் தண்ணீர் முக்கிய புள்ளியாக உள்ளது. கிராமத்தில் பல தலைமுறையினர் தண்ணீருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அவர் 50 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இந்த கிராமத்திற்கு வந்தார். வாழ்நாள் முழுவதும் அவர் வீட்டுக்கு ஒரு குழாயும் தண்ணீரும் கிடைக்க வேண்டும் எனக் காத்துக் கொண்டிருக்கிறார். குறைந்தபட்சம் இவருடைய மருமகளுக்கும், அவருடைய மருமகளுக்குமாவது சிறிது தண்ணீர் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்