வங்க கடலில் 'அசானி' புயல்: இலங்கை பெயர்சூட்டிய இயற்கை சீற்றம்

பிரசுரிக்கப்பட்டது

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று புயலாக வலுபெற்றுள்ளது. அதன்படி தற்போது உருவாகியுள்ள இந்த புயலுக்கு 'அசானி' என்று வானிலை ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

இந்த புயல் தொடர்ந்து நகர்ந்து,மே 10ஆம் தேதி ஆந்திரா மற்றும் ஒடிஷா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைபெறக்கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக,ஆந்திரா, ஒடிஷா,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: