அம்மாவுக்காக மொட்டையடித்துக் கொண்ட மகள்: வியப்பூட்டும் ஊக்கக் கதை
கிராந்தி தாஸ், ஹைதராபாதில் வசிக்கிறார். பல்வேறு உடல்நல பிரச்னைகள் காரணமாக தங்களுடைய தலைமுடியை இழந்தவர்களுக்கு தார்மீக ஆதரவு கொடுப்பதற்காக தனது தலையை இவர் மொட்டையடித்துக் கொண்டார். இவரது அம்மா, 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நல பிரச்னையால் தலை முடியை இழந்தார்.
கிராந்தி தாஸ், தனது கணவரின் உதவியுடன் மொட்டை போட வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். நீண்ட காலமாக செயல்பட்டு வரும் “வழுக்கை அழகானது” என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக தானும் இருப்பது மகிழ்ச்சி தருகிறது என்கிறார் இவர்.
கிராந்தி தாஸ் இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது தலையை மொட்டையடித்துக் கொண்டார். தனது முடியை புற்றுநோயாளிகளுக்கு அவர் தானம் செய்தார். அன்று முதல் ஒவ்வொரு வாரமும் தலையை மொட்டையடித்து வருகிறார்.
செய்தியாளர், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு - சங்கீதம் பிரபாகர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்