மகாராஷ்டிரா முதல்வருக்கு சவால் விடும் எம்பி, எம்எல்ஏ - யார் இந்த தம்பதி?

காணொளிக் குறிப்பு, நவ்னீத் கவுர் எம்.பி, எம்.எல்.ஏ. கணவருடன் கைது - யார் இவர்?
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீடு முன்பாக அனுமன் பாராயணம் செய்வதாக எச்சரித்த சுயேச்சை பெண் எம்.பி. நவ்னீத் கவுர் மற்றும் அவரது கணவரும் எம்எல்ஏவுமான ரவி ராணாவை மும்பை காவல்துறையினர் இன்று இரவு கைது செய்தனர்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டுக்கு வெளியே ஹனுமான் சாலிசாவை பாராயணம்செய்யும் அறிவிப்பை இந்த தம்பதி வெளியிட்ட பிறகு, ஆளும் சிவசேனை கட்சியின் தொண்டர்கள் நவ்னீத் ராணாவின் மும்பை வீடு முன்பாக பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :