You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கூவாகம் அழகிப் போட்டியில் வென்ற மெஹந்தி: "பெற்றோர்கள் கைவிடாமல் எங்களை ஏற்க வேண்டும்"
மிஸ் கூவாகம்-2022 அழகிப்போட்டிக்கான முதல் சுற்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றதில் விழுப்புரம், கடலூர், சென்னை, திருச்சி, சேலம், கோவை, ஈரோடு, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி நடந்து வந்தனர்.
முதல் சுற்றில் நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதிச்சுற்று விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் வைகை சந்திரசேகர், சின்னதிரை நடிகைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அழகிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேரும் இறுதி சுற்றில் தமிழ் கலாசார உடை அணிந்து நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொது அறிவுத்திறன் போட்டியில் மூன்று பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு மிஸ் கூவாகம் அழகி பட்டம் வழங்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்