ஜேஎன்யூவில் அசைவ உணவால் ஏற்பட்ட தகராறு - நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, ஜேஎன்யூவில் மாணவர்கள் மோதல்: காரணம் அசைவ உணவா? ராம நவமி பூஜையா?
பிரசுரிக்கப்பட்டது

நேற்று, டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் தேசிய மாணவர் சங்கம் மற்றும் இடது சாரி மாணவர்களுக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்துள்ளது.

பல்கலைக் கழக வளாகத்தில் ராம நவமியை ஒட்டி நேற்று அசைவ உணவு வழங்குவது தொடர்பாக இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் காவேரி விடுதியில் அசைவ உணவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபியினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக இடது சாரி மாணவர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

பாரதிய வித்யார்தி பரிஷத்தைச் சேர்ந்த மாணவர்கள் ராம நவமியை ஒட்டி பூஜை மேற்கொள்ள விடாமல் இடதுசாரியினர் தாக்கியதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: