கேரள நெல்லியாம்பதி மலை வனத்தை ஒளிரூட்டும் மின்மினி பூச்சிகள்
தமிழ்நாட்டின் கோவையில் இருந்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில் கேரள மாநிலத்திற்குள் உள்ள பகுதி நெல்லியாம்பதி. கன்னியாகுமரி துவங்கி குஜராத் வரை இடைவெளியே இல்லாமல் ஒரு நீண்ட மதில் சுவர் போல நிலை நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரே இடைவெளி இந்த பாலக்காடு கணவாய். இந்த கணவாயில் தான் கேரளாவை தமிழ்நாட்டோடு இணைக்கும் முக்கிய பாதை அமைந்துள்ளது. பாலக்காடு கணவாயின் தெற்கே அமைந்துள்ள மலைப் பகுதி தான் நெல்லியம்பதி.
இங்கு கோடை மழை பெய்த பிறகு, மார்ச் கடைசி முதல் மே இரண்டாவது வாரம் வரை, இந்த மின்மினி பூச்சிகள் கோடிக்கணக்கில் இங்கு குழுமியிருப்பதைக் காண முடியும். இயற்கையாகவே ஒளிரும் தன்மை வாய்ந்த இந்த பூச்சிகள், நெல்லியாம்பதியில் இருந்து விக்டோரியா வரை காணப்படுவதால், அவை இந்த இடங்களில் உள்ள மரங்கள் ஜொலிப்பது போல காட்சி தரும்.
இந்த மின்மினிப் பூச்சிகளின் நிகழ்வு குறித்து பெருமிதப்படும் ஊர் மக்கள், வன ஆர்வலர்களின் கருத்துக்களுடன் கூடிய காணொளி இது.
காணொளி தயாரிப்பு: பி. சுதாகர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்