You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் ஒரே நாளில் 268 ரூபாய் வரை உயர்ந்த கேஸ் விலை
இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நாடு முழுவதும், 19 கிலோ சிலிண்டருக்கு 250 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக மார்ச் 1-ஆம் தேதியன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 105 ரூபாய் உயர்த்தப்பட்டது. பிறகு மார்ச் 22-ஆம் தேதியன்று 9 ரூபாய் குறைக்கப்பட்டது. இதன்படி, கடந்த இரண்டு மாதங்களில், 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை 346 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, டெல்லியில் மார்ச் 1-ஆம் தேதிப்படி, 2,012 ரூபாய்க்குக் கிடைத்தது. மார்ச் 22-ஆம் தேதி 9 ரூபாய் விலை குறைப்புக்குப் பிறகு 2,003.50 ரூபாய்க்குக் கிடைத்தது. ஆனால், இன்று முதல் டெல்லி விலை நிலவரப்படி, 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரை வாங்குவதற்கு, 2,253 ரூபாய் செலுத்த வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்