ஷஃபாலி வர்மாவுக்கு பிபிசியின் வளர்ந்துவரும் வீராங்கனை விருது
பிரசுரிக்கப்பட்டது
பிபிசி வளர்ந்துவரும் வீராங்கனை விருது கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
2019-ஆம் ஆண்டில் இந்திய பெண்கள் டி-20 அணியில் பங்கேற்று சர்வதேசப் போட்டிகளில் ஷஃபாலி வர்மா விளையாடினார்.
இந்த விருதுக்காக பிபிசிக்கு நன்றி தெரிவித்த அவர், "அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்காக விளையாடுவேன் என நம்புகிறேன்" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்