You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருப்பதி அருகே பேருந்து பள்ளத்தில் விழுந்து 8 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக 54 பேருடன் அனந்தபூர் வரை சென்று கொண்டிருந்தது அந்தப் பேருந்து, திருப்பதிக்கு முன்பாக சென்று கொண்டிருந்தபோது, பாகர்பேட்டா பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 46 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்