You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வேலூரில் எலெக்ட்ரிக் பைக் வெடித்தது எப்படி? - தந்தை, மகள் உயிரிழப்பின் பின்னணி
கடந்த 25ஆம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டில் உள்ளே எலக்ட்ரிக் பைக்கை, சார்ஜ் போட்டுவிட்டு தனது படுக்கை அறைக்கு சென்று தந்தையும் மகளும் உறங்கச் சென்று இருக்கிறார்கள். மறுநாள் அதிகாலை மூன்று மணியளவில் மின் இணைப்பில் இருந்த அந்த எலக்ட்ரிக் பைக் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததோடு கரும்புகை பரவிய நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும், அருகிலிருந்த மற்றொரு பைக்கும் தீ பிடித்து எரிந்து வீடு முழுவதும் கரும்புகை பரவியுள்ளது.
இதனால் செய்வதறியாது பதற்றம் அடைந்த துரை வர்மா தனது மகள் மோகன பிரீத்தி உடன் வீட்டை விட்டு வெளியேற இயலாததால் கழிவறைக்குள் சென்று தஞ்சமடைந்தார். இருப்பினும், கரும்புகை நச்சுப் புகையாக மாறி தந்தையும் மகளும் மூச்சுவிட சிரமப்பட்டு கழிவறைக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்