பவுன்சர் வேலையில் மகாராஷ்டிரா பெண்- இவரது தினசரி அனுபவம் எப்படி?

காணொளிக் குறிப்பு, அகமதுநகரின் முதல் பெண் பவுன்சர்: கோமல் காலே சந்தித்த சவால்கள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் மகராஷ்டிராவில் உள்ள அகமதுநகரில் வசிக்கும் கோமல் காலே, பவுன்சராக பணியாற்றுகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்த வேலையில் சேர்ந்த இவர்தான் நகரின் முதல் பெண் பவுன்சர்.

கோமல் காலே காவல்துறையில் சேர விரும்பினார். ஆனால், அவரது விருப்பம் நிறைவேறவில்லை. இப்போது பவுன்சராக பணிபுரியும் அவரது கனவு நிறைவேறியுள்ளது. கோமலுக்கு சின்ன வயதில் இருந்தே தைரியமும் துணிச்சலும் இருந்ததால், அவர் மிகவும் சுலபமாக பழகுவார். தவறாக நடந்துகொள்ளும் பலர் அவரிடம் அடி வாங்கியுள்ளார்கள்.

கோமல் தனது பவுன்சர் வேலையோடு, வீட்டுப் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்கிறார். கூடுதல் வருமானத்திற்காக பெண்களுக்கான கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் தனது மகனின் படிப்பையும் கவனித்துக் கொள்கிறார். ஆனால், அவரை கேலி செய்பவர்கள், அமைதியாக இருப்பதில்லை.

தயாரிப்பு: அனகா பதக், ஷஹீத் ஷேக், அரவிந்த் பிரேகர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: