கோவை சூயஸ் குடிநீர் திட்டம்: பொதுமக்களின் அச்சத்துக்கு என்ன காரணம் - கள நிலவரம்

காணொளிக் குறிப்பு, கோவை சூயஸ் குடிநீர் திட்டம்: பொதுமக்களின் அச்சத்துக்கு என்ன காரணம் - கள நிலவரம்
பிரசுரிக்கப்பட்டது

கோவை மாவட்டத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ. 2,800 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் தற்போதைய திமுக ஆட்சியிலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரெஞ்சு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த திட்டம் முன்பே பரவலான விமர்சனத்தை எதிர்கொண்டது. அந்த திட்டத்தை முந்தைய ஆட்சியில் எதிர்கட்சி வரிசையில் இருந்தபோது திமுக எதிர்த்தது. இப்போது அதே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த திட்டத்தின் தற்போதைய நிலை, அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் என்ன பாதிப்பு நேரலாம் என மக்கள் கொண்டுள்ள அச்சத்தை விவரிக்கிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: