உலக தூக்க தினம்: நிம்மதியான உறக்கத்துக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
உலக உறக்க தினம் அல்லது தூக்க தினம் இந்த ஆண்டு இன்று மார்ச் 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உறக்கம் - நாம் அனைவரும் அன்றாடம் செய்யும் ஒன்றுதான். அதில் என்ன இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா?
24 மணி நேரத்தில் சராசரியாக எட்டு மணிநேரம் உறங்குகிறோம் எனும்போது நம் வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு உறக்கத்தில் செலவிடுகிறோம்.
தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் ஆரோக்கியமான உறக்கத்திற்கான வழிமுறைகள் பற்றி தூக்கமின்மை சுவாச கோளாறு நோய்களுக்கான மருத்துவர் எஸ். ஜெயராமன் இந்த காணொளியில் விளக்குகிறார்.
பால், பழங்களை சாப்பிடலாம் - ஆனால் மைதாவால் செய்யப்படும் பரோட்டா மற்றும் பிரியாணி போன்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளை இரவில் தூங்கும் முன்பு சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் ஜெயராமன்.
வேறு என்ன சாப்பிடலாம், என்ன செய்ய வேண்டும்? விரிவான தகவல்கள் இந்த காணொளியில்.
தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்