You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவையில் எஸ்.பி.வேலுமணி கைது: குண்டுகட்டாகத் தூக்கிச் சென்ற போலீஸ்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற திமுகவினர் பண விநியோகம் செய்வதாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியை காவலர்கள் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ் பி வேலுமணி, "கோவை மற்றும் திருப்பூரில் அதிமுக அமோகமாக வெற்றி பெறப் போகிறது என்பதை உணர்ந்த ஆளும்கட்சி பணத்தை கொடுத்தும் மிரட்டியும் வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கின்றது. அதற்கு காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் உறுதுணையாக இருக்கிறது. இங்கு தேர்தல் நியாயமாக நடக்கும் என நம்பிக்கை இல்லை. எனவே துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்." என்று கூறினார்.
பிற செய்திகள்:
- அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை: வழக்கின் பின்னணி
- சின்ன வெங்காய ஏற்றுமதி அதிகரித்தாலும் தமிழக விவசாயிகள் கலங்குவது ஏன்?
- நியூட்ரினோ திட்டத்தால் என்ன ஆபத்து? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?
- பஞ்சாப்பை மீண்டும் தக்கவைக்குமா காங்கிரஸ்? பாஜகவின் வாய்ப்புகள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்