கர்நாடகா ஹிஜாப் பிரச்னைக்கு பிரபலங்களின் எதிர்வினை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கர்நாடகாவில் வகுப்பறைகளில் ஹிஜாபை அனுமதிப்பது தொடர்பான விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான கமலஹாசன், பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என்று திரைத்துறையினர் பலரும் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.
``கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. இது முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம்,`` எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் இடுகை ஒன்றை பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

பிற செய்திகள்:
- 'அல்லா ஹு அக்பர்' முழக்கமிட்ட கர்நாடக மாணவிக்கு பாகிஸ்தானில் ஆதரவு - பெங்களூரு வழக்கு என்ன ஆனது?
- அயோத்தியில் கேட்பாரற்று கிடக்கும் பழங்கோயில்கள் - கள நிலவரம்
- ஹிஜாப் Vs காவி துண்டு: கர்நாடகாவில் தீவிரமாகும் ஆடை விவகாரம் - அடுத்தது என்ன?
- நேபாள எல்லையில் சீன ஊடுருவல்: பிபிசிக்கு கசிந்த அரசின் அறிக்கை சொல்வது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்