கிராமப்புற மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி அளித்து விஞ்ஞானி ஆக்க முயலும் பாலாஜி
கிராமப்புறங்களில் இருந்து ரோபோடிக்ஸ் துறையில் ஒரு லட்சம் விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும் என்ற கனவோடு செயல்பட்டு வருகிறார் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்த பாலாஜி திருநாவுக்கரசு.
இந்த முயற்சியின் நோக்கமே தாய்மொழி கல்வியில் தொழில்நுட்பத்தை கற்பித்து அவர்களை வல்லுநர்களாக உருவாக்க வேண்டும் என்பதுதான் என்கிறார் அவர்.
“ரோபோடிக்ஸ் என்பது 45 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பம்தான். அடுத்த 50 ஆண்டுகளில் இது நன்கு வளர்ச்சியடையும். நம்மை ஆளப்போகும் தொழில்நுட்பமாக இது இருக்கும்.
இத்தகைய ரோபோடிக்ஸ் துறையில் படிப்பதற்கு மிகவும் செலவாகும் என்ற ஒரு பிம்பம் உண்டு. கிராமப்புற குழந்தைகளும் அப்படித்தான் நினைத்தார்கள். இந்த பிம்பத்தை உடைக்கவேண்டும், அனைவரின் கைகளிலும் இதைக் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்று நினைத்தேன்,” என்கிறார் பாலாஜி.
தயாரிப்பு: நடராஜன் சுந்தர்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்