கல்வானில் இந்திய வீரர்களை போவே தங்கள் கொடியுடன் போஸ் கொடுத்த சீன வீரர்கள்

காணொளிக் குறிப்பு, கல்வானில் இந்திய வீரர்களை போவே தங்கள் கொடியுடன் போஸ் கொடுத்த சீன வீரர்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஜனவரி 3ஆம் தேதி மற்ற காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் தேசிய மூவர்ண கொடியை ஏற்றியது குறித்து மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசாங்கத்திடம் சில கேள்விகளை கேட்டனர்.

உண்மையில், ஜனவரி 1ஆம் தேதி, சீன நாளிதழான அரசு ஆதரவு குளோபல் டைம்ஸில் ஒரு செய்தி வெளிவந்தது.

அதில், புத்தாண்டையொட்டி கல்வான் பள்ளத்தாக்கில் சீன கொடி ஏற்றப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் உண்மையில் எந்த நாட்டு வீரர்கள், எந்த பக்கத்தில் இருந்தனர்? இது எப்படி அரசியலாக்கப்பட்டது என்பதை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: