இலங்கையில் ராட்சத பட்டத்துடன் 120 அடி உயரத்தில் மிதந்த இளைஞர் - என்ன ஆனது?
பிரசுரிக்கப்பட்டது
ராட்சத காற்றாடி (பட்டம்) ஒன்றை பறக்க விட்டபோது, பட்டம் விடுவதில் அனுபவமற்ற இளைஞர் ஒருவர், அதன் கயிற்றைப் பிடித்தவாறு ஆகாயத்தில் சுமார் 120 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்து, அதிருஷ்டவசமாக தப்பிய சம்பவமொன்று இலங்கையின் பருத்தித்துறை - குரும்பசிட்டி பகுதியல் நடந்துள்ளது.
மனோகரன் என்ற அந்த இளைஞருடைய வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக் காணியில் இளைஞர்கள் சிலர் இணைந்து, ராட்சத காற்றாடி ஒன்றைப் பறக்க விட்டனர். காற்றாடி விடுவதில் எந்தவித முன் அனுபவங்களும் அற்ற மனோகரன் அவர்களுடன் இணைந்துகொண்டார்.
பட்டம் மேலெழும் போது அதன் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், சிறிது சிறிதாக கயிற்றை விட வேண்டும் என்பது தெரியாத மனோகரன், காற்றாடியின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டிருக்க, அவர் பட்டத்துடன் மேலெழத் தொடங்கினார்.தயாரிப்பு: யூ.எல்.மப்ரூக்
பிற செய்திகள்:
- சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்"
- கொரோனா இருப்பது தெரியவந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
- 1.7 கோடி உயிரினங்களை பலிவாங்கிய பிரேசிலின் காட்டுத்தீ சம்பவங்கள் - மனித குலத்துக்கு எச்சரிக்கை
- திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் பலி; தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது
- வேலூர் நகைக்கடையில் 16.5 கிலோ நகை கொள்ளை: திருச்சி கொள்ளை போலவே நடந்ததா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்