பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தை நேரில் கண்டவர் - 'ஒரு சத்தம் கேட்டுச்சு, மரமெல்லாம் எரிஞ்சிருச்சு'
பிபின் ராவத் மரணமடைந்த ஹெலிகாப்டர் விபத்தை நேரில் கண்ட கிருஷ்ணசாமி என்பவர் பிபிசி தமிழிடம் பேசினார்.
"என் பேரு கிருஷ்ணசாமி, நஞ்சப்ப சத்திரம். நான் விறகு கொண்டுவந்து வெச்சுட்டு, அடுக்கி வெச்சுட்டு, பைப்புல தண்ணி வரல, பைப்பு ஒடஞ்சு போயிருச்சு. நானும் சந்திரகுமார் பையனும் பைப்ப கட்டிட்டு இருந்தோம். படார்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. கரண்டு கம்பியெல்லாம் ஆடிருச்சு. மரமெல்லாம் சாஞ்சிருச்சு. பாத்தா புகைமூட்டம். புகை குபுகுபுன்னு வருது. பனியும் அதிகம். மரத்துக்கு மேல திகுதிகுனு எரியுது. ஒருத்தர மட்டும் கண்ணால பாத்தேன். நெருப்புல எரிஞ்சு அப்படியே சாஞ்சாரு. எனக்கு அதிர்ச்சி ஆயிருச்சு. நான் ஓடிவந்து ஃபோன் பண்ண சொல்லிட்டேன் ஃபயர் சர்வீசுக்கும் போலீசுக்கும். கொஞ்ச நேரத்துல அதிகாரிக எல்லாம் வந்துட்டாங்க. அதுக்கப்பறம் நான் பொணம் போச்சுன்னா கூட பாக்கலங்க. எனக்கு அதிர்ச்சி. வந்து படுத்துட்டேன் பேசாம." என்றார் அவர்
செய்தி & காணொளி: கு. மதன் பிரசாத்
பிற செய்திகள்:
- ஒமிக்ரான் திரிபுக்கு தென்னாப்பிரிக்காவில் குறைவாக தடுப்பூசி செலுத்தியது ஒரு காரணமா?
- 450 குவாட்ரில்லியன் கிமீ நீளம் கொண்ட பூஞ்சை வலையமைப்புகள் - சுற்றுச்சூழலுக்குப் பயக்கும் நன்மை என்ன?
- ஒமிக்ரான்: தமிழ்நாட்டில் மரபணு மூலக்கூறு ஆய்வு அலட்சியப்படுத்தப்படுகிறதா?
- மகாராஷ்டிராவில் ஆணவக்கொலை: இரண்டு மாத கர்ப்பிணியை கொன்ற தாயும் சகோதரரும்
- மோதி - புதின் சந்திப்பு: இந்திய, ரஷ்ய உறவை அமெரிக்கா, சீனா விரும்பவில்லையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்