செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை நின்று போனாலும் நீர் வடியவில்லை

காணொளிக் குறிப்பு, செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை நின்று போனாலும் நீர் வடியவில்லை
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் சமீபத்திய கன மழை காரணமாக பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. செங்கல்பட்டு மாவட்டத்தின் படூர் ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மழை நின்றபோதும் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த நீர் இன்னும் வடியவில்லை.

கால்வாய்க்குள் ஓட வேண்டிய நீர் தங்களின் குடியிருப்புக்குள் மூன்று அடிவரை இருப்பதாக அவர்கள் கவலைப்படுகின்றனர். அங்குள்ள மக்களின் இன்னலை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :