தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த இருவருக்கு கொரோனா

காணொளிக் குறிப்பு, தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த இருவருக்கு கொரோனா
பிரசுரிக்கப்பட்டது

தென்னாப்பிரிக்காவில் 50 பிறழ்வுகளைக் கொண்ட ஒரு புதிய கொரோனா வைரஸ் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு 'ஒமிக்ரான்' என்றும், அது 'கவலைக்குரிய திரிபு' என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களில், கொரோனா அபாயமுள்ள 10 நாடுகளிலிருந்து பெங்களூருக்கு 584 பேர் வந்துள்ளனர். அதில் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய இருவர் முறையே நவம்பர் 11 மற்றும் நவம்பர் 20 தேதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் தென்னாப்பிரிக்க குடிமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் புதிய ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை உறுதி செய்ய கொரோனா திரிபைக் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்கள் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு நகர நிர்வாகத்தினர் கூறியதாக ஏ.என்.ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :