குமரியில் தரைப்பாலம் வலுவில்லாததால் காடுகளிலேயே முடங்கிய மோதிரமலை மக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அடுத்துள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது மோதிரமலை கிராமம். இந்த கிராமத்தை சுற்றி சுமார் 12க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மலைவாழ் பழங்குடி காணி இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் வசித்து வரும் மலைவாழ் பழங்குடியின மக்களின் பிரதான தொழில் விவசாயம். இவர்கள் வாழை, கிராம்பு, கிழங்கு, மிளகு, பாக்கு உள்ளிட்ட விளை பொருட்களை விளைவிக்கின்றனர். இன்னும் சிலர் தமிழ்நாடு அரசு ரப்பர் தோட்ட கழகத்தில் விவசாய கூலிகளாக இருந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என மலைவாழ் பழங்குடியின மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் காட்டுப்பன்றி, காட்டு யானை, காட்டு எருமைகளால் விளை நிலங்கள் மற்றும் மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இவர்களின் அனுபவத்தை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- கிளாஸ்கோ மாநாட்டில் தீவு நாடுகளுக்கு துரோகம் செய்துவிட்டதா இந்தியா?
- நிஜ செங்கேணியை சந்திக்க வேண்டாம் என இயக்குநர் கூறியது ஏன்? - 'ஜெய் பீம்' மணிகண்டன் பேட்டி
- இலங்கையில் 'அரிசி, சீனிக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்' - எதிர்க்கட்சியினர் போராட்டம்
- "நாலு நாளாச்சு, யாரும் வரலை" - குமரியில் தீவாக மாறிய கிராமத்தின் கள நிலவரம்
- குழந்தைகள் ஆபாச காணொளி பகிர்ந்ததாக தமிழகத்தில் 6 பேர் உள்பட 31 பேர் மீது சிபிஐ வழக்கு
- ஸ்ரீரங்கம் கோயிலில் மோதியின் உரை: திமுக, பாஜக மோதலின் உண்மை பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்