You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏற்காடு ஸ்பெஷல் 'மயோனைஸ் மிளகாய் பஜ்ஜி'
ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் நூற்றுக்கணக்கான மிளகாய் பஜ்ஜி கடைகள் உள்ளன. மிளகாய் பஜ்ஜி கடைக்காரர்கள் பஜ்ஜியை தொட்டு சாப்பிட பிரத்யோகமாக ஒரு வகையான சட்னி தயார் செய்து கொடுக்கின்றனர் அந்த சட்னி பஜ்ஜிக்கு மேலும் சுவை கூட்டுகிறது.
சுற்றுலா வரும் பயணிகள் ஏற்காட்டின் குளிர் கால நிலையினால் சூடாகவும் காரமாகவும் சுவையாகவும் சாப்பிட விரும்புகின்றனர். அதனால் இந்த வகையான மயோனைஸ் மிளகாய் பஜ்ஜிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
வெளிமாநிலங்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற ஊர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நகரங்களில் வசிக்கும் மக்கள் பீட்சா பர்கர் போன்ற உணவு வகைகளை சாப்பிட்டு பழக்கப்பட்டவர்கள் இருந்தாலும் அவர்களும் பாரம்பரிய தின்பண்டமான இந்த ஸ்பைசி மயோனைஸ் மிளகாய் பஜ்ஜி சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதோடு வெளிநாட்டவரும் விரும்பி உண்கின்றனர். இதை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதை இந்தக் காணொளியில் விரிவாகக் காணலாம்.
தயாரிப்பு: ஏ.எம். சுதாகர்
தொகுப்பாக்கம்: ஜெயகுமார் சுதந்திரபாண்டியன்
பிற செய்திகள்:
- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் திடீர் இடமாற்றம் - வலுக்கும் எதிர்ப்புக்கு என்ன காரணம்?
- இலங்கைச் சிறையில் இருந்து 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
- சென்னையில் வெள்ளத்தைத் தடுப்பது எப்படி? சூழலியல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?
- 'கடன் பொறியில் சிக்கிய' இலங்கைக்கு 'நச்சு' உரத்தை அனுப்பிய சீனா - பின்னணி என்ன?
- ரூ.300 கோடி அறிவிப்பு: இலங்கை போரில் காணாமல் போனோரின் குடும்பங்கள் எதிர்வினை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்