தித்திக்க வைக்கும் சேலம் "ஜிலேபி தெரு"

காணொளிக் குறிப்பு, தித்திக்க வைக்கும் சேலம் "ஜிலேபி தெரு"
பிரசுரிக்கப்பட்டது

சேலம் குகை மாரியம்மன் தெருவில் நூற்றுக்கணக்கான ஜிலேபி கடைகள் உள்ளதால் இந்த தெருவை ஜிலேபி தெரு என்று அழைக்கிறார்கள். ஜிலேபிகள் மக்கள் முன்னிலையிலேயே தயாரிக்கப்படுவது தான் இதன் சிறப்பு.

70 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக இங்கு தயாரிக்கப்படும் ஜிலேபிகள் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் செல்கின்றன.

அதோடு ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன

ஒரு கிலோ ரூ.250-க்கும் ஒரு ஜிலேபி ரூபாய் 6-க்கும் கொடுக்கிறார்கள். திருமணம் வளைகாப்பு மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஆர்டரின் பெயரில் மொத்தமாக செய்து தருகிறார்கள் .

சுட சுட மக்கள் முன்னிலையிலேயே செய்து கொடுப்பதால் காலங்காலமாய் பெரும் வரவேற்பு உள்ளது இந்த சேலம் ஜிலேபிக்கு.

தயாரிப்பு: சுதாகர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :