தெருவிலங்குகளை அரவணைத்து, மருத்துவ சிகிச்சை எல்லாம் கொடுத்து வளர்க்கும் இளைஞர்கள் குழு
பிரசுரிக்கப்பட்டது
புதுச்சேரி - தமிழக எல்லையில் தெரு விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுத்து, அதனை முறையாக பராமரிக்கும் தன்னார்வ சேவை மையம் ஒன்று இயங்கி வருகிறது.
குறிப்பாக தெருக்களில் வசிக்கும் விலங்குகள் மற்றும் வளர்ப்போரால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவற்றை உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்டு தேவையான சிகிச்சையை தனியார் கால்நடை மருத்துவமனைகளுக்கு இணையாக வழங்குகின்றனர்.
தெரு விலங்குகள் மீது கொண்ட அன்பின் காரணமாக புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் பல ஆண்டுகளாக சேவை செய்துவந்த இளைஞர்கள் கூட்டு முயற்சியால் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து இந்த சேவை மையத்தை பிரத்யேமாக நிறுவி உதவி செய்து வருகின்றனர்.
ஒளிப்பதிவு: நடராஜன் சுந்தர்
படத்தொகுப்பு: ஜெயகுமார் சுதந்திரபாண்டியன்
பிற செய்திகள்:
- ஆர்யன் கானுக்கு அக்டோபர் 7வரை காவல் - பாலிவுட்டை உலுக்கும் போதைப்பொருள் கலாசாரம்
- 'அண்ணாத்த' ரஜினி உருக்கம்: "எஸ்பிபி 45 வருடங்களாக எனது குரலாகவே வாழ்ந்தவர்"
- உலக தலைவர்களின் ரகசிய சொத்து விவரங்களை அம்பலப்படுத்தும் புலனாய்வு - விரிவான தகவல்கள்
- நீலகிரியின் டி23 புலி - கமலின் கோரிக்கைக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?
- ஸ்டாலின் பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்தது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்