ருத்ர தாண்டவம்: விமர்சனம்
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக சேர்ந்திருக்கிறது ரிச்சர்ட் ரிஷி - மோகன் ஜி கூட்டணி.
தர்மபுரியைச் சேர்ந்த ரொம்பவும் நல்லவரான ருத்ர பிரபாகரன் (ரிச்சர்ட் ரிஷி) சென்னையில் காவல்துறை ஆய்வாளராகப் பணிபுரிகிறார். கஞ்சா விற்கும் இளைஞர்களை துரத்திச் செல்லும்போது அந்த இளைஞர்கள் கீழே விழுந்துவிட, அவர்களுக்கு தலையில் அடிபட்டுவிடுகிறது. அதில் ஒரு இளைஞன் சில நாட்கள் கழித்து இறந்துவிட, அந்த இளைஞன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஆய்வாளர் அவனை அடித்துக் கொன்றுவிட்டதாக பிரச்சனை எழுகிறது. இதனால் ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்படுகிறார். இதையடுத்து மனைவி (தர்ஷா குப்தா) அவரைப் பிரிகிறார். இந்தப் பிரச்சனயிலிருந்து ருத்ர பிரபாகரன் எப்படி மீள்கிறார் என்பது மீதிக் கதை.
எழுத்து வடிவில்: ருத்ர தாண்டவம் - சினிமா விமர்சனம்
பிற செய்திகள்:
- SRH vs CSK: சென்னையை அலறவிட்ட ஜேசன் ஹோல்டர், ஹெலிகாப்டர் ஷாட்டில் கரை சேர்த்த தோனி
- நரேந்திர மோதி அறிமுகப்படுத்தவுள்ள செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் என்றால் என்ன?
- உத்தர பிரதேசத்தில் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண் கருக்கலைப்பின்போது பலி
- டைனோசர்களின் 50 எலும்புகள் - புதிய பார்வை தரும் எச்சங்கள்
- 'சிவகுமாரின் சபதம்': விமர்சனம்
- பெண் அதிகாரிக்கு 'இரு விரல்' பரிசோதனை நடத்தியதா இந்திய விமானப்படை?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்