அட்ரீனல் ஹைப்பர் பிளேசியா: அரிய வகை நோயை கலையால் வெல்லும் கடலூர் பெண்

காணொளிக் குறிப்பு, அட்ரீனல் ஹைப்பர் பிளேசியா: அரிய வகை நோயை கலையால் வென்ற பெண்
பிரசுரிக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் சாவடி பகுதியை சேர்ந்தவர் ஏஞ்சலின் ஷெரில் (21), பிறப்பிலேயே அட்ரீனல் ஹைப்பர் பிளேசியா என்ற அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தினமும் மாத்திரைகள் உட்கொண்டால் தான் உயிர் வாழ முடியும், இப்படிப்பட்ட அரிய வகை நோயுடன் பிறந்த ஏஞ்சலின் இந்த நோயால் முடங்கிவிடாமல் பரதம், சிலம்பம், கரகம், கட்டைக்கால் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட தமிழர் கலைகளைக் கற்று 16 உலக சாதனைகளை படைத்துள்ளார்.

மேலும் பள்ளி பருவத்திலேயே இவருடைய சாதனைகளை பாராட்டி தமிழக அரசின் உயரிய விருதான கலை இளமணி விருதை தனது 16 வயதில் பெற்றுள்ளார்.

காணொளித் தயாரிப்பு: நடராஜன் சுந்தர்

படத்தொகுப்பு: ஜெயகுமார் சுதந்திரபாண்டியன்

குறிப்பு: இந்த காணொளியில் பிளேடை கண் இமையில் பிடிக்கும் காட்சியை தொழில்முறை பயிற்சிக்கு பிறகு ஏஞ்சலின் மேற்கொண்டுள்ளார். மற்றவர்கள் முறையான பயிற்சியின்றி இதை முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :