கொரோனா காப்பீடு பலன்கள் மறுக்கப்பட்ட தனியார் மருத்துவத்துறையினர் - பிபிசி புலனாய்வு

காணொளிக் குறிப்பு, கொரோனா காப்பீடு பலன்கள் மறுக்கப்பட்ட தனியார் மருத்துவத்துறையினர் - பிபிசி புலனாய்வு
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறையினர் ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு அரசு அறிவித்த காப்பீடு முறையாக சென்றடைந்ததா என்பதை பிபிசியின் இந்த புலனாய்வு அலசுகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தரவுகளைப் பெற பிபிசியின் செய்தியாளர் ஜுகல் புரோஹித் மாதக்கணக்கில் காத்திருந்து பல மாவட்டங்களுக்கு பயணம் செய்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துத்துறையினரின் குடும்பங்களுடன் பேசினார்.

அரசு மருத்துவத்துறையினருக்கு இழப்பீடு வழங்க காட்டிய ஆர்வத்தை அரசு தனியார் மருத்துவத்துறையினருக்கு வழங்க காட்டவில்லை என்பதை அவர் கண்டறிந்தார். அவர் கண்டறிந்த உண்மைகள், ஆச்சரியமூட்டுபவை ஆக இருந்தன.

தமது ஆய்வின் முழு விவரங்களையும் அவர் இந்த காணொளியில் விளக்குகிறார் ஜுகல் புரோஹித்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :