You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கூலி வேலை செய்து 50 ஆண்டுகளாக மது ஒழிப்பு பிரசாரம் செய்யும் காந்தியவாதி கூத்தன் ஐயா
கூலி வேலை செய்து சம்பாதித்து, 50 ஆண்டுகளாக மது ஒழிப்பு பிரசாரம் செய்யும் காந்தியவாதியான கூத்தன் ஐயா, எப்படி பிரசாரம் செய்கிறார்?
5௦ ஆண்டுகளுக்கு மேலாக கிராமம் கிராமமாக சென்று மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார் காந்தியவாதி எஸ்.கே.கூத்தன்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் குட்டிமணிபள்ளியைச் சேர்ந்தவர் கூத்தன். வயது 75. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும் இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் கண்ட கூத்தனுக்கு மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதிலேயே தோன்றியது. காந்திய கருத்துகளால் ஈர்க்கப்பட்ட இவர், தனது 20 வயதில் மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினார்.
வெண்ணிற உடையில் தலையில் காங்கிரஸ் குல்லாவும் சட்டைப்பையில் மதுவை ஒழிப்போம் மக்களை காப்போம் என்ற விழிப்புணர்வு வாசகம் பொறித்த பட்டையும் அணிந்தபடி அதிகாலையிலேயே வீட்டை விட்டு சைக்கிளில் கிளம்பி விடுகிறார் இவர்.
பிற செய்திகள்:
- ஆப்கானிஸ்தானில் தாலிபனின் எழுச்சி பாகிஸ்தானை எவ்வாறு பாதிக்கும்?
- இந்தியாவில் இஸ்லாமியராக இருப்பது ஒரு குற்றமா? தொடர்ந்து தாக்கும் இந்து கும்பல்கள்
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீது வரி: நீங்கள் எந்த அளவு கவலைப்பட வேண்டும்?
- உத்தரப்பிரதேசத்தில் குழந்தைகளை தாக்கும் `மர்மக் காய்ச்சல்` - ஏராளமான உயிரிழப்பு
- ஐபோனில் ஆவணங்களை ஏற்க அமெரிக்காவில் திட்டம் - அந்தரங்க உரிமை பற்றி கவலை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்