மூன்று விரல் மட்டுமே இருந்தால் என்ன? அசத்தலாக சிலம்பம் சுற்றும் சிறுமி

காணொளிக் குறிப்பு, மூன்று விரல் மட்டுமே இருந்தால் என்ன? அசத்தலாக சிலம்பம் சுற்றும் சிறுமி
பிரசுரிக்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த வீரராகவன்- கோமதி தம்பதியரின் மகள் யாஷிகா.

7 வயதுடைய யாஷிகா 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி பிறக்கும்போதே கை மற்றும் கால்களில் குறைபாடு இருந்துள்ளது. சிறுமியின் கைகள் பிறரை போன்று இல்லாமல், ஒவ்வொரு கைகளில் 3 விரல்கள் மட்டுமே இருக்கும். இதை மருத்துவச் சிகிச்சை மூலம் சரி செய்ய சிறுமியின் பெற்றோர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

மேலும் குழந்தையின் கைகளில் இருக்கும் குறைபாடு காரணமாக எந்த ஒரு பொருளையும் பிடிப்பது, தூக்குவது, எழுதுவது மிகக் கடினமானதாக இருந்தது. இதனால் குழந்தையின் விரல்களுக்கு பலம் சேர்ந்தால் மட்டுமே அவரால் பிறரைப் போல கை விரல்களை சகஜமாக உபயோகிக்க முடியும் என்பதை யாஷிகாவின் பெற்றோர் உணர்ந்தனர்.

ஆகவே இவர்களது குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள பள்ளி மாணவர்களுக்குச் சிலம்பம் கற்பிக்கும் ஆசிரியர் சதீஷ்குமார் என்பவரிடம் சிலம்பம் பயிற்சிக்காக யாஷிகாவை அனுப்பினர். யாஷிகாவின் கை விரல்கள் இருக்கின்ற சூழலில் அவர் சிலம்பம் கற்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது. ஆனால் சிலம்ப ஆசிரியரின் தீவிர பயிற்சியாலும் குழந்தை யாஷிகாவின் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்பால் சிலம்பம் கலையைக் கற்றார்.

இதன் மூலமாக பிறர் செய்யும் அனைத்து காரியங்களையும் குழந்தை யாஷிகாவும் செய்யும் அளவிற்கு கை விரல்களில் பலம் சேர்ந்தது. தற்போது அவரால் அனைத்து பொருளையும் எடுப்பதும், தூக்குவதும், பள்ளி பாடங்களை எழுதுவதும் சுலபமாக மாறியுள்ளது.

காணொளி தயாரிப்பு: நடராஜன் சுந்தர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :