விஸ்மயா மரணம்: கேரளத்தை உலுக்கும் வரதட்சணை கொடுமை வழக்கு - நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, கேரளத்தை உலுக்கும் வரதட்சணை கொடுமை வழக்கு - ஆயுர்வேத மருத்துவ மாணவிக்கு என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் 24 வயது பெண் உயிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு அடுத்தடுத்து பல குடும்ப வன்முறை தொடர்பான புகார்களையும் வெளியே கொண்டுவந்துள்ளது.

மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவரின் பதவி விலகலும் இந்த ஓரிரு தினங்களில் நடைபெற்றுள்ளது.

திங்களன்று விஸ்மயா என்னும் ஆயுர்வேத மருத்துவத்தின் இறுதி ஆண்டு மாணவி குளியல் அறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரின் கணவர் எஸ். கிரண் குமார் கண்டதாகவும் கூறப்படுகிறது. கிரண் குமார் போக்குவரத்து துறையில் துணை மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ளார்.

விஸ்மயாவின் கணவர் வீட்டினர் இது தற்கொலை என்று கூறுகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் தற்கொலை என்ற கோணத்தை தாண்டி பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :