திருநங்கைகளுக்கும் இலவசப் பேருந்துப் பயணம்: பரிசீலிப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதில்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

சாதாரணக் கட்டண அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசப் பயண உரிமை, மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்படவேண்டும் என்று ட்விட்டரில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்குப் பதில் அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஊடகர் இந்துஜா ரகுநந்தன் என்பவர் ட்விட்டர் மூலம் விடுத்த கரிக்கையைப் பகிர்ந்து அதற்கு ஸ்டாலின் அளித்த பதில்:

"மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம்.

தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி.

பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்".

இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள மூத்த பத்திரிகையாளர் டி.சுரேஷ்குமார்,

"கல்லூரி விண்ணப்பங்களில் பாலினத்தைக் குறிப்பிடும் இடத்தில் ஆண், பெண் என்ற பெட்டிகளைத் தவிர்த்து மூன்றாம் பாலினத்தவரைக் குறிப்பிடுவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது முந்தைய கருணாநிதி ஆட்சிதான்" என்று நினைவு கூர்கிறார்.

நீண்டகாலம் கல்வி தொடர்பான செய்திகளை அளித்துவரும் அவர், தற்போது தி ஹிண்டு ஆங்கில நாளிதழின் துணை இருப்பிட ஆசிரியர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :