“நேப்கின் பேடுகளைகூட மாற்ற விடமாட்டார்கள்” – வாழ்வாதாரத்துக்காக புலம்பெயர்ந்த இளம் தொழிலாளர்களின் கதை #TamilNaduOnWheels
இடம்: தென்கரும்பலூர் கிராமம், தண்டராம்பட்டு தாலுகா, திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை நகரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் தென்கரும்பலூர் கிராமத்தில் இருக்கும் சௌந்தர்யாவின் வீட்டில் ஒரே ஒரு அறைதான்.
திருவண்ணாமலை மாவட்டம் என்றால் நமக்கு உடனடியாக மனதிற்கு வருவது கார்த்திகை தீபம், அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதை ஆகியவைதான். ஆனால், அதையும் தாண்டி இங்கு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் இருக்கிறது என்பது அப்போதுதான் புரிந்தது.
சுமார் 24 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த மாவட்டம், அதிகம் சார்ந்திருப்பது என்னவோ விவசாயத்தைதான். ஆனால், ஆண்டு முழுவதும் தங்களுக்கு இது வருமானம் தருவதில்லை என்பதே இந்த மாவட்டத்தின் பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.
தலித் மற்றும் பட்டியலினத்தவர்கள் அதிகம் இருக்கும் இந்த மாவட்டம், 1970-80களில் வடக்கு ஆற்காடில் இருந்து பிரிக்கப்பட்டது. ஆனால், அப்போது முதல் பெரிய அளவிலான முன்னேற்றம் நடந்திருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.
குடும்ப வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இதுபோன்ற பலரது கண்ணீர் கதைகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.
செய்தி சேகரிப்பு: அபர்ணா ராமமூர்த்தி, அ.தா, பாலசுப்பிரமணியம், ஜெயகுமார் சுதந்திரபாண்டியன்ஒளிப்பதிவு/ படத்தொகுப்பு: நேஹா, ஆமிர் பீர்ஸாதா
இந்த காணொளியின் எழுத்து வடிவத்தை பார்க்க கீழே கிளிக் செய்யவும்:
பிற செய்திகள்:
- தொடரும் உள்ளடி: கொந்தளித்த திருமா - என்ன நடக்கிறது வி.சி.கவில்?
- மேகத்துக்குள் ட்ரோன்களை அனுப்பி ஷாக் கொடுத்து மழை பெய்யவைக்க முயற்சி
- மாங்கல்ய தோஷம்: படிக்க வந்த 13 வயது சிறுவனை திருமணம் செய்த 'டியூசன் டீச்சர்'
- கமல்ஹாசன்: நடிகர் முதல் அரசியல்வாதி வரை ஒரு "தசாவதாரம்"
- நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்