மும்பை கார் வெடிகுண்டு வழக்கில் என்ஐஏ விசாரணையில் தினமும் வெளிவரும் புதிய தகவல்கள்

காணொளிக் குறிப்பு, மும்பை கார் வெடிகுண்டு வழக்கில் என்ஐஏ விசாரணையில் தினமும் வெளிவரும் புதிய தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டது

பிப்ரவரி 25 அன்று காலை மும்பையின் மையமான பகுதியில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகே வெடிபொருள்கள் ஏற்றிய கார் ஒன்று பிடிபட்டது.

அடுத்த சில நாள்களில், அந்த வண்டியின் உரிமையாளர் என்று சொல்லப்படுகிறவரின் சடலம், மும்பை கடற்கரையில் கரை ஒதுங்கியது. அந்த நபருக்கு அறிமுகமானவர் என்று சொல்லப்படுகிற போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஏராளமான கேள்விகள் நிறைந்த இந்த மர்மக் கதையை தற்போது மத்திய அரசின் தேசியப் புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. அந்த வழக்கின் சமீபத்திய முன்னேற்றங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: