சீமானின் ஆண்டு வருமானம் ரூ. 1000 தானா? சர்ச்சையாகும் வேட்பு மனு விவரம்
பிரசுரிக்கப்பட்டது
தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இதையொட்டி கடந்த 15 ஆம் தேதி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் கடந்த நான்கு ஆண்டுகளில் 65,500 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளதாகவும் 2019-2020 ஆம் ஆண்டுக்கான வருமானம் 1000 ரூபாய் மட்டுமே எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, ` சீமானின் ஆண்டு வருமானம் வெறும் ஆயிரம் ரூபாயா?' எனக் கேள்வியெழுப்பி, சமூக வலைதளங்களில் சிலர் மீம்ஸ்களை பதிவிட்டனர். இதனைக் கவனித்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் கொதிப்படைந்தனர்.
ஆனால், வேட்பு மனுவில் இடம்பெற்ற இந்த விவரங்கள் உண்மைதானா, இது குறித்து சீமான் தரப்பு என்ன கூறுகிறது என்பதை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
- கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- வாரிசு அரசியல் என நினைத்தால் மக்கள் என்னை நிராகரிக்கட்டும்' - உதயநிதி ஸ்டாலின்
- "ஆயிரம் விளக்கு திமுக கோட்டை அல்ல" - பாஜக வேட்பாளர் குஷ்பு பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்