சிறையில் வி.என். சுதாகரன் - கைவிட்டாரா சசிகலா?

பிரசுரிக்கப்பட்டது

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழிய வி.கே.சசிகலாவுக்கு சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, திவாகரன் உள்ளிட்டோர் உடன்பிறந்தவர்கள். இவர்களில் வனிதாமணிக்குப் பிறந்தவர்கள் டி.டி.வி.தினகரன், வி.என்.சுதாகரன், பாஸ்கரன் உள்ளிட்டோர்.

இவர்களில் சுதாகரனை வளர்ப்பு மகனாக ஜெயலலிதா தத்தெடுத்தார். ஆனால், இந்து தத்தெடுப்புச் சட்டப்படி சுதாகரன் தத்தெடுக்கப்படவில்லை. அந்த நேரத்தில் நடிகர் சிவாஜியின் மகள் வழிப் பேத்தியான சத்தியலட்சுமியுடன் சுதாகரனுக்குத் திருமணம் நடந்தது. அவரது ஆடம்பர திருமணத்துக்குப் பிறகு, வேதா இல்லத்துடனான ஜெயலலிதாவின் உறவு முறிந்துவிட்டாலும் ஜெயலலிதாவின் இறுதிக்காலம் வரையில் சொத்துக்குவிப்பு வழக்கு என்ற பெயரில் தொடர்ந்து பயணித்து வந்தார் சுதாகரன். சசிகலா சிறை சென்றபோது இவரும் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது சசிகலா வெளியே வந்து விட்டார், ஆனால் சுதாகரன் தொடர்ந்து சிறையில் இருக்கிறார். அந்தப்பின்னணியை அலசுகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: