You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோயம்புத்தூர் ஷப்ரினா: பசி என்று வருவோருக்கு இலவசமாக பிரியாணி வழங்கும் பெண்
கோவை நகரின் ரெட்பில்ட்ஸ் சாலையில் அமைந்துள்ள இருபது ரூபாய் பிரியாணி கடை சமீபத்தில் பிரபலமாகி வருகிறது. இதற்கு காரணம் இருபது ரூபாய்க்கு பிரியாணி வழங்குவது மட்டுமல்ல, 'பசிக்கின்றதா..எடுத்துக்கோங்க...' என எழுதிவைத்து இலவசமாக பிரியாணி பொட்டலங்களை அள்ளிக்கொடுக்கும் ஷப்ரினாவின் மனிதநேயம்தான்.
காலை சுமார் 11 மணியளவில் இவரது பிரியாணியை வாங்க பலர் வரத்தொடங்குகின்றனர். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் மொத்த பிரியாணியும் தீர்ந்துவிடுகிறது.
"கடந்த 3 வாரங்களாக, கடையின் முன்பு ஒரு பெட்டியை வைத்து அதில் பிரியாணி பொட்டலங்களை வைத்துவிடுவோம். பெட்டியின் மேல், 'பசிக்கின்றதா..எடுத்துக்கோங்க...' என எழுதி வைத்துள்ளேன். ஆரம்பத்தில் இதை சிலர் விநோதமாக பார்த்தனர். ஆனால், பசியில் வாடும் ஆதரவற்றோர் சிலர் பொட்டலங்களை எடுத்துச் சென்றனர். ஏழை எளியோர் மட்டுமின்றி பணம் கொடுத்து வாங்கும் வசதியுள்ளவர்களும், இலவச பிரியாணி பொட்டலங்களை எடுத்துச் செல்கின்றனர்." என்கிறார் ஷப்ரினா
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: