செங்கோட்டையில் சீக்கிய கொடி: தீப் சித்து பின்னணி என்ன?

பிரசுரிக்கப்பட்டது

2021 ஜனவரி 26-ம் தேதி, கிசான் டிராக்டர் அணிவகுப்பின் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்திலிருந்து ஒரு பகுதி மக்கள் பிரிந்து செங்கோட்டையை அடைந்தனர். அங்கு அவரகள் சீக்கிய மத சின்னங்களையும், காவி சின்னங்களையும், விவசாயிகளின் சங்க கொடிகளையும், வேறு சில கொடிகளையும், செங்கோட்டையின் சுவர்களில் ஏற்றி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் தீப் சித்து என்ற நடிகர் ஈடுபட்டதாக பேசப்பட்டு வருகிறது. தற்போது செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் அவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த போது, தீப் சித்து அங்கு இருந்தார் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். பின்னர்தான் தீப் சித்து விமர்சிக்கப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: