ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவரின் 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு' வாழ்வு

பிரசுரிக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்த்த கண்ணதாசன் சிறு வயதிலே வேலைக்காக மும்பை சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட உறவுகளால் இவர் மீது கொலை, ரவுடியிசம் தொடர்பான வழக்குகள் பதிவாயின.

மும்பை நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. பல ஆண்டுகள் மகாராஷ்டிரம் மற்றும் தமிழ்நாடு சிறைகளில் இருந்த இவர், சிறையில் கொடுத்த யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் மூலம் தாம் மனம் திருந்தியதாகக் கூறுகிறார். நன்னடத்தை அடிப்படையில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு 2010ஆம் ஆண்டு இவர் விடுதலை செய்யப்பட்டார்.

பெற்றோரை இழந்த இவர், பிறகு சுய தொழில் செய்து விருத்தாசலத்தில் வாழ்கிறார். கணவரை இழந்த ஒரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டு கடந்த 9 ஆண்டுகளாக விருத்தாசலத்தில் மூலிகை டீ விற்று வருகிறார் இவர். இதோ அவரது மனம் நெகிழ வைக்கும் வாழ்வு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: